வாக்குப்பதிவு நேரம்சரியாக அறிய புதுத்திட்டம்
-சிவகங்கை,: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குப்பதிவு துவக்கம், முடிக்கும் நேரம் சரியாக கணக்கிட புதுத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பிற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. தேர்தல் பிரிவு அதிகாரிகளும், போலீசாரும் தேர்தலுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள துவங்கினர். தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைப்பதில் தீவிரம் காட்டியுள்ளன.
கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய வாக்குப் பதிவு இயந்திரங்களை விட சில புதுமையை புகுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி,ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், பதிவான வாக்கு எண்ணிக்கை 'பிரின்ட் அவுட்' மூலம் அறியும் வசதி கொண்டுவரப்படுகிறது. மேலும், வாக்குப்பதிவு துவங்கும், முடியும் நேரத்தை துல்லியமாக கணக்கிட 'டிஸ்பிளே கிளாக்' கருவி பொருத்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்தல்களில் அதிகாரிகள், கட்சிகளின் வாக்குச் சாவடி ஏஜன்ட்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு நேரம் பதிவு செய்யப் படும். இதில் கூடுதல் குறைவு இருக்கலாம். வருகிற தேர்தலில் மாநில முழுவதும் வாக்குப்பதிவை ஒரே நேரத்தில் துவங்கி, முடிக்கும் நேரம் அறிய இந்த புதியமுறை இயந்திரங்களை பயன்படுத்தலாம் என, தேர்தல் பிரிவினர் கூறுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக