இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC : 2016ம் ஆண்டிற்கான தேர்வுகள் (ANNUAL PLANNER)அட்டவணை வெளியீடு

படம்
2016ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 9 தேர்வுகள் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார். சென்னையில், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. பின் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி பேசியதாவது, குரூப் 4 தேர்வுகளின் மூலம் 4,931 பேரும்,துணை கலெக்டர்களை தேர்ந்தெடுப்பதற்காக குரூப் 1 தேர்வு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுகள், இந்தாண்டு நடைபெற உள்ளதாக அருள்மொழி கூறினார்.

JACTTO மறியல் இராமநாதபுரம்.

படம்

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை

'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை, அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஓட்டளிப்பதற்கு வசதியாக, ஓட்டுச்சாவடிகளில் தேவையான வசதி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தினர். மேலும், தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள மென்பொருள் மற்றும் தேர்தல் நிர்வாகம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

6,7& 8 வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்திற்கான காணொளி பாடங்கள்

அனைத்து பாடங்களுக்கும் காணொளி மூலம் மாணவர்களுக்குபுரியும்வண்ணம் தயாரிக்கப்பட்டு உள்ளது.DVD தேவைபடுவோர் இறைஅருள் 8098773950 என்ற எண்ணிலும் RK 9843398567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர். போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், சனி, ஞாயிற்றுக் கிழமை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, தேர்தல் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். போராட்டத்தின், மூன்றாவது நாளான பிப்., 1 பள்ளி வேலை நாள். தமிழகம் முழுவதும், 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் நடத்த உள்ளதால், அன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.அரசு கிடுக்கிப்பிடி வகுப்புக்கு வராமல் போராடும் ஆசிரியர்களுக்கு, 'ஆப்சென்ட்' போட்டு, ஒரு நாள் சம்பளப் பிடித்தம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.'தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தால் அதை ஏற்கக் கூடாது; போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியலை அரசுக்கு தொக...

4 Different Methods to Transfer your Mobile Contacts

படம்
Did you just buy a new mobile phone? After considering significant factors such as budget, features, sleek design, size as well as platform, The first thing that you’ll probably is copy all the phone numbers and other contact information from the old phone to your new cell.There are different ways to transfer contacts from one phone to another. The process may vary depending upon the phone support cloud but broadly, there are four options. I will discuss the most popular mobile platforms like BlackBerry, iPhone, HTC, Nokia, Windows Phone, Samsung and Android. You can opt any one of them listed below. Transferring from SIM card When your old mobile address book is comparatively smaller, and you only wish to copy the phone numbers to your new mobile phone, then simply use your SIM card. Just copy the phone numbers from the old phone’s memory to your SIM card, insert this SIM card into your new phone and then copy the phone numbers in your new phone’s memory. Most phones such as Nokia...

ஸிகா வைரஸ் தமிழகத்தைப் பாதிக்குமா?

வெளிநாடுகளில் கொசுக்களால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தமிழகத்தைத் தாக்கக் கூடுமா என்பதற்கு பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை உதவி இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல் அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஸிகா (ழண்ந்ஹ) என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு ஸிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் இந்த வைரஸும் பரவுகிறது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007-ஆம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது. அதன்பிறகு, 2015-ஆம் ஆண்டு மேதம் மாதம் பிரேசிலில் இந்த வைரஸ் தாக்கியதை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. அறிகுறிகள்: காய்ச்...

Latest New Forms

Latest New Forms Form 9: Genuineness Apply Form - PDF Format -

NMMS Exam Study Material

NMMS Study Materials NMMS Study Material 14 | 8th Maths | Mr. P. Saravanan - Click Here

தொடக்கக்கல்வி-2015-2016 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு வளர் பயிற்சி-SSA வுடன் இணைந்து நடத்துதல்-மாநில அளவிளான கருத்தாளர் பயிற்சிக்கு தலைமையாசிரியர்களை தேர்ந்தெடுத்து அனுப்புதல்

படம்
Posted by tamilnaduteachers news No comm

உலக நாடுகளின் ஊழல் போக்கு: 76-வது இடத்தில் இந்தியா- 9 இடங்கள் முன்னேற்றம்

படம்
டிரான்ஸ்பெரசி இன்டர்நேஷனல் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புள்ளி விவரம் 2015-ம் ஆண்டுக்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடாக கடைசி இடத்தில் இருக்கின்றன. 2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 168 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை அடைந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில், நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்தது. மொத்தம் 168 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 38, பிடித்துள்ள இடம் 76. தாய்லாந்து, பர்கினோ பாசோ, பிரேசில்...

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!

லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இந்தியாவில் 15, ஆண்டுகள், 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம். * கடன் தொகை ரூ. 25 லட்சம் * திரும்பக் கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்) * வட்டி: 10% * மாதத் தவணை ரூ. 21,939 இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி... (1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்! மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ...

அரசு இ-சேவை விவரங்களை அறிய புதிய கைபேசி செயலி அறிமுகம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் அனைத்து மண்டலம், பகுதி, கோட்ட அலுவலகங்கள், சென்னை. மதுரை,திருச்சி, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 465 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் வருவாய்த்துறை தொடர்பான சான்றிதழ்களுக்கு ரூ.50-ம், சமூகநலத்துறை உதவித் திட்டங்களுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையங்களில் சொத்து வரி, தொழில் வரி கம்பெனி வரியையும் செலுத்தலாம். தற்போது இம்மையங்களில், மின் கட்டணங்களை செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இவை தவிர, மத்திய அரசின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் தொடர்பான சேவை, அரசுப் பணியாளர் தேர்வாணய தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது, இ-சேவை மையம் தொடர்பான தகவல்களை கைபேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் ‘TACTV’ என்ற பெ...

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம்மற்றும் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் 60 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 30 நடுநிலைப் பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காதலித்தால் ஆசிரியர் பணி இல்லை

காதல் திருமணம், விவாகரத்து போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஆசிரியர் பணி இல்லை' என, தனியார் கல்வி நிறுவனங்கள் நிபந்தனை விதிக்க துவங்கி உள்ளன.காதல் விவகாரங்களால், மாணவ, மாணவியர் பாதிக்கக் கூடாது; பள்ளிக்கும் அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக, பல தனியார் பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி உள்ளன. மாணவ, மாணவியருக்கு ஒழுக்கம், குருகுல கல்வி முறை, கண்டிப்பான விதிகளை போதித்து, முறைப்படுத்தவும் முடிவு செய்துள்ளன.இதன் ஒரு கட்டமாக, குடும்ப பிரச்னைகள் உள்ள பட்டதாரிகள், காதல் திருமணம் செய்தவர்கள், விவாகரத்துசெய்த பட்டதாரிகள், கலப்பு திருமணம் செய்தவர்ககளுக்கு, ஆசிரியர் வேலை வழங்கவேண்டாம் என, முடிவெடுத்து உள்ளன. பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், இந்த முடிவை எடுத்துள்ளதால், காதல் திருமணம் செய்த பட்டதாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.சென்னையில் உள்ள பிரபல கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைநிறுவனத்தின், குரோம்பேட்டை மற்றும் ஆலப்பாக்கம் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு துவங்கி உள்ளது.அதில், வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகளில், 'விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், துணையை பிரிந்து வாழ்பவராகவோ, காத...

வெள்ளத்தில் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்கள் விநியோகம்: பள்ளி கல்வித்துறை

வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே 27.01.2016 முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை நேற்று (24.01.16) தொடக்கி வைத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தப் புதிய நடைமுறையின் மூலம் நுகர்வோர்கள் பயனடைவார்கள், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஆசிரியர்கள் 3 நாட்கள் போராட்டம்

ஜாக்டோ அமைப்பின் மதுரை மாவட்ட செயற்குழுக் கூட்டம், அமைப்பாளர்கள் சந்திரன், ஆரோக்கியம் தலைமையில் நடந்தது.மாவட்டத்திலுள்ள 19 ஆசிரிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசுக்குஇணையான சம்பளம், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு நலத்திட்ட அலுவலர் நியமிக்கப்படுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 30, 31, பிப்., 1ல் மதுரை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடக்கும் போராட்டத்தில் தினமும் 5000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டத்தால் வகுப்புகள் முடங்கும் அபாயம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதனால், ஒரு வாரம் வரை வகுப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான ஜாக்டோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30, 31 மற்றும் பிப்., 1ல் மாவட்ட தலைநகரங்களில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து, அனைத்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து, போராட்டம்குறித்து பிரசாரம் செய்யவும் ஜாக்டோ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பெயரளவுக்கு வந்து விட்டு, ஒரு வாரம் வரை போராட்டபணிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து வகுப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடாமல் மவுனமாக இருப்பதால், ஆசிரியர்சங்க போராட்டத்துக்கு, அதிகாரிகளும் துணை போவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோரிக்கைகள் என்ன? * மத்திய அரசுஆசிரியர்களை போல், தமிழக ஆசிரியர்களுக்கு, ஆறாவது ஊதியக்க...

TNPSC GROUP IIA TENTATIVE ANSWERS KEY DT:24.01.2016

TENTATIVE ANSWER KEYS Sl.No. Subject Name POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION–II (NON-INTERVIEW POSTS) (GROUP-II A SERVICES) (Dates of Examination:24.01.2016 FN) 1 GENERAL TAMIL 2 GENERAL ENGLISH 3 GENERAL STUDIES (DEGREE STD) Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 3rd February 2016 will receive no attention.
படம்
ay, January 19, 2016 நாளை தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வுக்கூட்டம் !!!

Central Teacher's Eligibility Test ( CTET ) - Admit Card -2016 published.

Central Board of Secondary Education Central Teacher's Eligibility Test ( CTET ) Date of Exam - 21.02.2016 Download CTET Admit Card -2016 in ctet.nic.in/ctetapp/online/admitcardlogin.aspx

குடியரசு தினம் என்றால் என்ன? - மாணவர்களுக்கான குடியரசு தின உரை

படம்
ஹலோ குட்டீஸ்... ஜனவரி 26-ம் தேதி எதற்காகப் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள்? குடியரசு தினம், அதனால் விடுமுறை என்று நீங்கள் சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சரி குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்? ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை. எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள். அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது; சுத...

TAMS DISTRICT MEETING AT KALAIYATKOIL IN SIVAGANGA

படம்

பள்ளிகளில் 'தமிழ் வாசித்தல் திறன' ஆய்வு செய்ய நாளை மாநிலம் முழுவதும் குழு ஆய்வு

படம்

Group 2A தேர்வில் கேட்கப்பட்ட கணித வினாக்களுக்கான விளக்கமான விடைகள்

. காஞ்சி TNPSC அகாடமியின் group 2A தேர்வில் கேட்கப்பட்ட கணித வினாக்களுக்கான விளக்கமான விடைகள்.

30 முதல் ஆசிரியர்கள் தொடர் மறியல்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜேக்டோ அறிவித்துள்ளது. கோவை தாமஸ் கிளப்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஜேக்டோ மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்புக்கென தனிச் சட்டம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் சிவானந்தா காலனியில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.முன்னதாக, மறியல் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில்ஜனவரி 27 முதல் 29-ஆம் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்க சுற்றுப்பயணம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் த.அருளானந்தம், சு.கணேஷ்குமார், ந.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் தமிழ்நாடு ஆசிரியர் முன்னெற்ற சங்கம் கோரிக்கை

ஆசிரியர் குடும்பத்திற்கு பணப்பலன் ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்துவிட்டனர், இவர்களின் குடும்பத்திற்கு பணப்பலன் வழங்கவில்லை. தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு பணப்பலன்களை விரைந்து வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச்சங்க மாநில தலைவர் தியாகராஜன் காளையார்கோவிலில் கூறியதாவது: மத்திய அரசு நாடு முழுவதும் ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு,'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' செயல்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முதலில் 2004ல் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பங்களிப்பு திட்டத்தை கைவிடக்கோரி வலியுறுத்தி வருகிறோம். 2006--11ல் செயல்பட்ட தி.மு.க.,அரசும் கண்டுகொள்ளவில்லை.கடந்த 2011 தேர்தலின் போது ஜெயலலிதா,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டம் தொடரும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டும் முடியப்போகிறது,இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை.ஆயிரக்கணக்கான ஆசிரியர்க...
வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில்அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள், படிப்பை முடித்து, வேலை தேடிச் செல்கின்றனர். ஆனால், 'அவர்களிடம் வேலை செய்வதற்கு தேவையான போதிய திறமை இல்லை' என, கார்ப்பரேட் நிறுவனங்கள் குறை கூறுகின்றன.கடந்த, 2015ல், 650 பொறியியல் கல்லுாரிகளில் பயின்று பட்டம் பெற்ற, 1.50 லட்சம் மாணவர்களிடம், தனியார் அமைப்பு ஆய்வு நடத்தியது;அதில் வெளியான முடிவுகள் விவரம்:நம் நாட்டில் பொறியியல் பட்டம் என்பது, ஒப்புக்கு பெறுவதாகவே உள்ளது. இந்நிலையை மாற்ற, கல்வித் தரத்தை வெகுவாக உயர்த்த வேண்டும். பணியிடங்களில் உள்ள சூழ்நிலையைஎதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும்.மூன்றாம் நிலை நகரங்களில் கூட, வேலைக்கு தேர்வாகும் திறமையுடன் இன்ஜினியர்கள் உருவாகின்றனர். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், இன்ஜினியர்களுக்கான தேவைகளை...

TNPSC GROUP-2 GENERAL TAMIL ANSWER KEY

TNPSC GROUP-2 GENERAL TAMIL ANSWER KEY click here... Prepared by, Mamallan IAS Academy

வேலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலக தகவல்

படம்

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு - ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONAL VOTERS DAY(NVD PLEDGE)......

படம்
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 25/01/16 திங்கள் அன்று காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONAL VOTERS DAY(NVD PLEDGE)......

பி.எப்., வட்டி 9 சதவீதம்?

இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும். அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம...

அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்

படம்
அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும் அரசு பணியில் உள்ளவர்கள் Passport அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்புவதற்கு முன்பே அவரவர் appointment authority க்கு மேற்காணும் இணைப்பு படிவத்தை அனுப்பிவிட வேண்டும்.அதன் அசல் கடிதம் ஒன்றை (செராக்ஸ் கூடாது) passport அலுவலகம் செல்லும் போது அங்கு கொடுக்க வேண்டும். இதில் பெறுநர் முகவரி pin code உட்பட முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.பெறுநர் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32 வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பணிகள்; மற்ற அரசு துறை சார்ந்த ஆசிரியர்களின் பணிகளை கவனிக்கின்றனர்.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டில், 32 மாவட்டங்களுக்கு தனியாக, 32 சி.இ.ஓ.,க்கள் உள்ளனர்.இதன்படி, மொத்தமுள்ள, 64 சி.இ.ஓ., பணியிடங்களில், 22 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சி.இ.ஓ., கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டம் வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்கள் உள்ளன. இவற்றில், 35 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.பல இடங்களில், சி.இ.ஓ.,க்கள் இல்லாததால், மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ.,நிதியை கையாள்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் ஆயத்தப் பணிகளை கவனிக்க, கண்காணிப்பு அதிகாரிகளாக, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் வேண்டும். ஆனால், ...

IT STATEMENT CALCULATION

IT STATEMENT CALCULATION LINK CLICK

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது பிஎஃப் கணக்கும் - அதன் பலனும்

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு? அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது. வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை. எவ்வளவு பிடிக்கிறார்கள்? *************************************** பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்படும். பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக அதற்கு இணையான தொகையையும் சேர்த...

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

படம்

யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும் - இயக்குநரின் செயல்முறை

படம்
யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும்  - இயக்குநரின் செயல்முறை

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன? பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும். தேவையான ஆவணங்கள்: பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவ...

முன் அனுமதி என்றால் என்ன ??? யார் முன்அனுமதி பெறவேண்டும்? யார் பின் அனுமதி பெற வேண்டும்???

படம்

NMMS Previous Year Question Paper and Model Question Paper

NMMS Previous Year Question Paper and Model Question Paper NMMS SAT Social Science Question Paper 2014 NMMS SAT Science Question Paper 2014 NMMS SAT Mathematics Question Paper 2014 NMMS MAT Question Paper 2014 NMMS MAT Question Paper 2013 with solution NMMS SAT Question Paper 2009 with Answer key NMMS MAT Question Paper 2009 with Answer key NMMS SAT Model Question Paper 2 NMMS SAT Model Question Paper 1 NMMS MAT Model Question Paper NMMS MAT and SAT Study Material NMMS 8th std science module 23 Pages NMMS 7th std science module 19 Pages NMMS 6th std science module 9 Pages NMMS 7th std Social science module NMMS 6th std Social science module NMMS Mathematics 200 Question And Answers Part 1 NMMS Science 290 Question And Answers Part 2 NMMS Science 100 Question And Answers Part1 NMMS Social Science 255 Question And Answers Part 2 NMMS Social Science 150 Question And Answers Part 1

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ் லக்கானி

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில், எட்டு லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்த ஆண்டு புதிதாக, 12.33 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், எட்டு லட்சம் பேர், அலைபேசி எண்ணை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, பெயர் சேர்க்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாளஅட்டை அச்சிடப்பட்டுள்ளது. இவை, பிப்., 10 முதல், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், வீடு வீடாக வழங்கப்படும். வாக்காளர் பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பார்வைக்கு வைக்கப்படும். பட்டியலில், பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இளம் வயது வாக்காளர்கள் நேற்று வெ...

சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாட போக்குவரத்து இணை ஆணையாளர் வலியுறுத்தல்

படம்

TNSET EXAM 2016 NOTIFICATION & ONLINE APPLICATION WILL PUBLISHED MOTHER TERESA UNIVERSITY-KODAIKANAL.

Date of Examination : 21.02.2016 Last Date for Online application : 10.02.2016 Notification click Here TNSET 2016 Online Form click Here Print Hall Ticket click Here

ஆன்லைன் ரெயில் டிக்கெட்; ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை 35 நொடிகளுக்கு பிறகே டிக்கெட் பதிவாகும்

ஆன்லைன் ரெயில் டிக்கெட்; ஏஜெண்டுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை 35 நொடிகளுக்கு பிறகே டிக்கெட் பதிவாகும் ரெயில்வே முன்பதிவு மையங்களில் மட்டுமின்றி, இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. உண்மையான பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தனையை முடித்து டிக்கெட் எடுக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும்.ஆனால், சில ஏஜெண்டுகள், விசேஷ சாப்ட்வேர்களை பயன்படுத்தி, முன்கூட்டியே விவரங்களை பதிவு செய்து, அதிவேகமாக டிக்கெட்டுகளை எடுத்து விடுகிறார்கள். இதனால், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுகிறது.எனவே, தங்கள் இணையதளத்தை ஏஜெண்டுகள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கவும் ஐ.ஆர்.சி.டி.சி. புதிய பாதுகாப்பு அம்சங்களை இணையதளத்தில் சேர்த்துள்ளது. இதன்படி, ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை எடுத்து முடிக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும். அதற்கு முன்பாக யாரும் டிக்கெட் எடுத்துவிட முடியாது.இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.ச...

TPF /GPF முன்பணம் / EL Surrender / சம்பளம் ஆகியவை கருவூலத்தில் சமர்பிக்கப்பட்டு உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

TPF /GPF முன்பணம் / Eட surrender / சம்பளம் ஆகியவை கருவூலத்தில் தாமதம் என அலுவலகத்தில் கூறுகிறார்கள் என்றால் உங்கள் படிவங்கள் கருவூலத்தில் சமர்பித்த தேதி மற்றும் எண் கீழ்கண்ட முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். Click Here For ECS Status Of Government Employee Click Here for ECS Status Of Pensioners
New Health Insurance Scheme - Only New IDCard Click Here

ஜன. 23-இல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு தேர்வுப் போட்டிகள்

சென்னை நேரு விளையாட்டரங்கில் அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற சனிக்கிழமை (ஜன.23) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் அ.நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய அளவில் அரசு ஊழியர்களுக்கு 2015-16ஆம்ஆண்டுக்கான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மேசைப் பந்து தேசியப் போட்டிகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையும், ஆண்களுக்கான கையுந்துப் பந்து போட்டிகள் பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக நடைபெறவுள்ள வீரர் வீராங்கனைகள் தேர்வுப் போட்டியில் சொந்த செலவில் கலந்து கொள்ள விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வாழ்வீம ராஜாவை 74017 03446 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாநிலப் போட்டிகளில் தேர்வு பெறுவோர் தேசியப் போட்டியில் பங்கேற்கலாம். தேசியப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தினப்படி, பயணப்படி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம்.

வாக்காளர் பட்டியலை இணையதளத்திலும் காணலாம். click Here

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RH LIST) - 2016

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்(RH LIST)-2016 ஜனவரி 22 கியார்வீன் (வெள்ளி) பிப்ரவரி 10 சாம்பல் புதன் (புதன்) 22 மாசிமகம்(திங்கள்) மார்ச் 4 வைகுண்டசாமி ஆராதனை விழா(வெள்ளி) 7 மகா சிவராத்திரி(திங்கள்) 24 மாண்டி வியாழன் (வியாழன்) ஏப்ரல் 21 சித்ரா பௌர்ணமி(வியாழன்) ஜூன் 7-இரமலான் நோன்பு தொடக்கம்(செவ்வாய்) ஜூலை 2-சாபே காதர் (சனி) ஆகஸ்டு 2-ஆடிப் பெருக்கு(செவ்) 12-வரலட்சுமி நோன்பு, (வெள்) 18-இரிக்கு உபாகர்மம், யசூர் உபாகர்மம் (வியா) 19-காயத்திரி ஜெபம்(காயத்ரி ஜபம்) செப்டம்பர் 12-அராபத்(திங்) அக்டோபர் 3-இஸ்லாமியர் புத்தாண்டு(திங்) நவம்பர் 2-கல்லறைத் திருநாள்(திங்) 14- குருநானக் பிறந்தநாள்(திங்) டிசம்பர் 12 கார்த்திகை தீபம்(திங்) 24-கிறிஸ்து பிறப்பு முன் நாள்(சனி) 31-புத்தாண்டு முன் நாள் (சனி)