School Morning Prayer Activities - 10.07.2018 ( TAMS Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. உரை: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. பழமொழி : A good face needs no paints அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை பொன்மொழி: அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன். இரண்டொழுக்க பண்பாடு : 1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் . 2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் . பொது அறிவு : 1.நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 16 2.இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 4 நீதிக்கதை : சிங்கத் தோல் போர்த்திய கழுதை (The Donkey in The Lion's Skin) அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி...