! ஆ சிரியர்கள் வருகைப்பதிவை தினசரி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டிவரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படித்த பலர் நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்தளவிற்கு கல்வியில் சிறந்த விளங்கிய கடலுார் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவால்,பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து போதிய கற்றல் திறனின்றி உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், பொதுத் தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து மாநில பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணி நேரத்திற்கு சரிவர வராததே இதற்கு முக்கிய காரணம் என்பதை க...