பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 பொதுத்தேர்வில், முறைகேடுகளை கண்டுபிடிக்க, 3,000 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 15 ஆயிரம் முழு நேர உடற்கல்வி ஆசிரியர்கள்; 2,000 தொழிற்கல்வி ஆசிரியர்கள், பறக்கும் படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள், 'டிரில்' மாஸ்டராக இருப்பதால், மாணவ, மாணவியரிடம் கடுமையாக நடந்து கொள்வதாக, சில மாவட்டங்களில் புகார் எழுந்தது.இதையடுத்து, 'மாணவ, மாணவியரை மிரட்டும் வகையில், அவர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது' என, பறக்கும் படையில் உள்ள ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'மாணவர்களை பெயரளவில் பிடித்து, காப்பியடித்ததாக பதிவு செய்யக்கூடாது. அதற்கான சாட்சி மற்றும் நடைமுறை விதிகளை பின்பற்றியே, பிடிக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு மாணவர் காப்பியடித்தோ, 'பிட்' அடித்தோ பிடிபட்டால், அந்த மாணவரின் துண்டுத்தாள் அல்லது காப்பிய...